ஞாயிறு, 17 ஜூன், 2018

வினோதமான வேலை


வினோதமான வேலை

ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ,
என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு
வந்தார். குடியிருக்க வீடு இல்லை.

எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை
கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு
விட முடிவு செய்தார். “நான் வேலையற்றவன். நகைச்சுவை
உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக
வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும்

வேலைகளையும் செய்வேன். உணவும் தங்கும் இடமும்
அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்”
என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்புகொள்ள
ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம்
வரை இவரை வாடகைக்கு எடுக்கிறார்கள்.

500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள்,
செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும்
தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள். “என்னுடைய
வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொண்டு,
அதற்கேற்றவாறு நடந்துகொள்வேன்.

உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக்
கண்டுகொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும்
என்னை மோசமாக நடத்தியதில்லை. அவர்கள் வீட்டில்
ஒருவராகவே பார்க்கிறார்கள். வீட்டிலுள்ளவர்களை
நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதே என்னுடைய
முக்கியமான வேலை.

மற்ற நேரங்களில் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வேன்.
அவர்களுடன் வெளியே செல்வேன். உணவருந்துவேன்.
இன்று என்னை வாடகைக்கு எடுப்பதற்குப் பலத்த போட்டி.
ஒரு மாதத்துக்கு முன்பே பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்”
என்கிறார் கோட்டானி.

இதைத்தான் நம்மவர்கள் மனமிருந்தால் மார்க்க முண்டு (வழி  ) என்று சொன்னார்கள்.

மனிதனுக்கு துன்பம் வரும் பொழுதுதான் மூளை அதிலிருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியை  காண்கிறது.

ஆகவே துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாய் இயங்குங்கள்.

மலையென துன்பம் வந்தாலும் பனியென விலகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக